ராஜமுத்திரை - முதல் பாகம் [electronic resource]
Sandilyan2021
eBook
Find it!
முத்து வாங்க வந்த மோகனப்பாவை தன்னை உதறிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். தன்னைப்பற்றிய மூவர் தவிர வேறு சிலரும் தோப்பில் இருளில் மறைந்திருப்பதை அவர்கள் கைகால்கள் அசைந்த அரவத்திலிருந்து தெரிந்து கொண்டாள் அவள். 'ஒருவனைப் பிடிக்க இத்தனை பேர் எதற்கு?' என்று எண்ணி வியக்கவும் செய்தாள். படித்துறையில் அந்த இளங்காளையைக் கவர்ந்த அந்தப் பாவையின் இதயம் அவனை அணுகிக்கொண்டிருந்த ஆபத்தை நினைத்து ஒரு விநாடி அனுதாபப்பட்டது. ஒரு வினாடி அந்த அனுதாபம் மறைந்தது. அந்தக் கள்ளனுக்கு இந்தத் தண்டனை தேவைதான் என்று நினைத்த அவள், "சரி நான் என்ன செய்யவேண்டும்?" என்று வினவினாள். பின்னால் நின்றவனை நோக்கி. அவன் அவள் காதில் சில வார்த்தைகளைச் சொன்னான். "பயங்கரம் பயங்கரம்! அவரைக் கொல்லவா போகிறீர்கள்?" என்று கூச்சலிட்ட அவள் வாய் மீண்டும் பலமாகப் பொத்தப்பட்டது. அதே சமயத்தில் தன்னை எதிர் நோக்கியிருந்த ஆபத்தை உணராமல், அந்த இளங்காளை மிக நிதானமாக அந்த இடத்தை அணுகிக் கொண்டிருந்தான்
Main title:
Author:
Imprint:
[Place of publication not identified] : Sandilyan, 2021
Collation:
1 online resource (1 text file)
ISBN:
9798201358693
Language:
English
Subject:
BRN:
3285785
Bookmark link:
More Information:
