Skip to main content
Thumbnail for என் உயிரின் உயிரே... [electronic resource]

என் உயிரின் உயிரே... [electronic resource]

Maheshwari, R.2021
eBook
அழகின் இலக்கணமாய்... அவ்வளவு நீள முடியுமாய்... துள்ளித் திரியும் மீன் விழிகளுமாய்... ஆப்பிள் கன்னத்தோடு... செப்பு உதடுமாய்... நல்ல கட்டான உடல் வாகோடு... கொடியிடையுடன் நல்ல நிறத்தில் இருந்தாள், திவ்யபிரியா. அம்மாவிடம் கெஞ்சி, கூத்தாடி, அவர்களுக்கு அருகாமையில் உள்ள கல்லூரியிலேயே இடமும் வாங்கி விட்டாள்! இன்றுதான் முதன் முதலாய் கல்லூரிக்குச் செல்கிறாள்! அவளிடம் இருந்த நல்ல சுடிதாரில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். பட்டான கூந்தலை... தளரத் தளர ஒற்றைப் பின்னல் பின்னி... காதோரமாய் அழகிய ரோஜா ஒன்றை செருகி... அவள் கல்லூரிக்குச் சென்றது வானிலிருந்து இறங்கி வந்த நிலா கல்லூரிக்குப் புறப்படுவது போல இருந்தது! மரகதம் பயந்து கொண்டு தான் அனுப்பினாள்."திவ்யா யாரிடமும் அநாவசியமாய் பேசக்கூடாது!""சரிம்மா!""முக்கியமா ஆண் பிள்ளைகள் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது!" "கட்டாயம், அம்மா!""அவர்கள் பேச வந்தாலும் நிமிர்ந்து பாராமல் சென்று விட வேண்டும்! நீ போவது படிக்க மட்டுமே! அது மட்டும் உன் நினைவில் இருக்க வேண்டும்!... நம் குடும்பம் கஷ்டப்படுவது உனக்கு மனதில் இருக்க வேண்டும்... பெண்களிடம் கூட அளந்தே பேசும்மா! ஒரு அளவோட நட்பு வச்சிக்கோ!... ஜாக்கிரதைம்மா! உன் அப்பா இருந்தால் எனக்கு இவ்வளவு பயம் இருக்காது! தகப்பனில்லாமல் வளர்ந்த பிள்ளை தறுதலை அப்படின்னு சொல்லக்கூடாதும்மா!... என்னோட பயத்தை புரிஞ்சிக்குவேன்னு நம்பறேன். ஏதாவது தப்பான பேச்சு என் காதில் விழுந்தால் கூட உன் படிப்பை நிறுத்திடுவேன். புரிஞ்சதா...?" மரகதம் கடுமையான கண்டிப்புடன் கூற..."அம்மா புரியுதும்மா! அநாவசியமா ஏன் பயந்து நடுங்கறே? நான் என்ன சின்னப் பிள்ளையா...? நல்லது எது? கெட்டது எது?ன்னு தெரியாமல் இருக்க." அம்மாவுக்கு நம...
Imprint:
[Place of publication not identified] : R.Maheshwari, 2021
Collation:
1 online resource (1 text file)
ISBN:
9798201375850
Language:
English
BRN:
3285807
View my active saved list
0 items in my active saved list